மடை திறந்த வெள்ளம்!
கொம்பு சீவிக் கொண்டுதான் வந்தான்
பின்புதான் தெரிந்தது..கொம்புகள் உடையத்தான்
சீவப்பட்டது என்று..
தனித்து போனதற்காய் கொஞ்சமாய் கோபம் கொண்டான்..
நியாயமான கோபம் என்றாலும்.. மாயை தானே கோபமும்..
கலவியின் கலவையில் கருத்தரித்த உடலிது..
இதில் கருவிகளாய் உணர்வுகளும்.. கொஞ்சம் உயிரும்..
உயிரின் எடை இருபது கிராம் என்று எங்கோ படித்தது
ஞாபகத்திற்கு வந்தது..
விற்க முடியாத உயிர்.. விற்றால் வாங்கி கொள்வார்களாம்
இதயத்தையும் இன்னும் சில கருவிகளையும்..
மனிதம் செத்துப் போனது மனதுக்கு புரிந்தது..
இன்னும் வானம் இருக்கிறது போல் தெரிகிறது..
சிறு தூசி தானே இந்த பூமியும் அண்டத்தில்..
No comments:
Post a Comment